sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் 'எக்ஸாம் ஈஸி'; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

/

பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் 'எக்ஸாம் ஈஸி'; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் 'எக்ஸாம் ஈஸி'; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் 'எக்ஸாம் ஈஸி'; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி


ADDED : ஏப் 02, 2025 07:50 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பத்தாம் வகுப்பு, ஆங்கில மொழிப்பாட பொதுத்தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்த கேள்விகளுடன் மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 50 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று, ஆங்கில மொழிப்பாட தேர்வு நடந்தது. அதன்படி, 4,287 மாணவர்கள், 4,407 மாணவியர் என, 8,694 பேர் தேர்வு எழுதினர். தவிர, 148 மாணவர்கள், 81 மாணவியர் என, 229 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். தனித்தேர்வர்களை பொறுத்தமட்டில், 54 மாணவர்கள், 46 மாணவியர் என, 100 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 8 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு குறித்து பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:

அனன்யா: ஆங்கிலத் தேர்வை மிகவும் நன்றாக எழுதியுள்ளேன். ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. இதேபோல, இரண்டு மதிப்பெண் வினாக்கள், தொடர்ந்து பயிற்சி பெற்றதன் வாயிலாக, எளிதாக எழுத முடிந்தது. குறிப்பாக, இலக்கணப் பகுதிகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், விரைந்து பதிலை எழுதி முடித்தேன். நுாறு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

ரிஷ்வந்த் வெங்கட்: ஒரு மதிப்பெண் வினாக்களை எளிதாக எதிர்கொண்டேன். அதேபோல, இரண்டு, ஐந்து மற்றும் எட்டு மதிப்பெண் வினாக்கள், இலக்கண பகுதிகளும் எளிமையாக இருந்தது. ஆசிரியர்கள் கடந்தாண்டு வினாத்தாள்களை உள்ளடக்கிய பயிற்சி அளித்திருந்தனர். அதன் காரணமாக, அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதியுள்ளேன். முழுமையான மதிப்பெண் கிடைக்கும்.

விஸ்மயா: 'சினானிம்ஸ்' பகுதியில் ஒரு மதிப்பெண் வினா பகுதியில், கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இருப்பினும், ஏற்கனவே அதிக பயிற்சி பெற்றிருந்ததால் விடையை எளிதாக எழுத முடிந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள், இலக்கண பகுதிகள் மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து விடைகளையும் எழுதிய பின், சரிபார்க்க போதுமான அளவு நேரம் கிடைத்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.

* வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:

ஹரிணி: ஆங்கில மொழிப்பாட தேர்வு மிக கடினமாக இருக்கும் என பயந்தேன். ஆனால் வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை அச்சமின்றி எழுதினேன். ஒரு மதிப்பெண்களுக்கான வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. மற்றபடி தேர்வுக்காக சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட்டதால் வினாக்களுக்கு உடனுக்குடன் தயக்கமில்லாமல் பதில் எழுத முடிந்தது.

ஸ்ரீசாலினி: ஆங்கில தேர்வை பொறுத்த வரை, படித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்டகப்பட்டதால், தேர்வை விறுவிறுப்பாகவும், தெளிவாகவும் எழுதினேன். பாடத்திலிருந்து நேரடி வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு சில வினாக்கள் கடினமாக இருந்தாலும், பிற வினாக்கள் எளிமையாக இருந்ததால் நல்ல முறையில் எழுதியுள்ளேன். விரைவாக தேர்வு எழுதி முடித்ததால், விடைத்தாளை திருப்பி பார்க்க நேரம் கிடைத்தது.

* உடுமலை கொடிங்கியம் ஆர்.கே.ஆர்., ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

காருண்யா ஸ்ரீ: ஆங்கில பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் நேரடியாக வந்தன. பள்ளியில் பலமுறை பயிற்சி செய்த வினாக்களாக வந்ததால், குழப்பமின்றி வினாக்களுக்கு தெளிவாக பதில் எழுதினேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

பொன்லட்சுமி: ஆங்கில பாடத் தேர்வில் இலக்கண பகுதியில் எதிர்பார்த்த வினாக்கள்தான் கேட்கப்பட்டிருந்தன. முந்தைய தேர்வு வினாத்தாள்கள் வைத்து பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் நெடுவினாக்கள், ஒரு மதிப்பெண் உள்ளிட்ட பகுதிகளும் சுலபமாகவே இருந்தன.






      Dinamalar
      Follow us