/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போனஸ் பேச்சில் உடன்பாடு:துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
/
போனஸ் பேச்சில் உடன்பாடு:துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
போனஸ் பேச்சில் உடன்பாடு:துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
போனஸ் பேச்சில் உடன்பாடு:துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 12, 2025 10:39 PM
வால்பாறை:போனஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகராட்சியில் எல்.டி., மேன்பவர் சொலிசன் நிறுவனம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக பேச்சு வார்த்தை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
பேச்சு வார்த்தையில், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புரவு பொது பணியாளர்கள் சங்க தலைவர் செல்வக்குமார், செயலாளர் பாலசுப்ரமணி, துணைத்தலைவர் ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையின் முடிவில், போனஸ் 4 ஆயிரம் மற்றும் ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இதனால், துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.