/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.எம்., அணி கபடியில் முதலிடம்
/
என்.ஜி.எம்., அணி கபடியில் முதலிடம்
ADDED : அக் 12, 2025 10:38 PM
பொள்ளாச்சி:முதல்வர் கோப்பை மற்றும் பாரதியார் பல்கலை கல்லுாரிகள் இடையிலான மண்டல கபடி போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி, கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி துவக்கம் முதலே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரையிறுதியில், குமரகுரு கல்லுாரி அணியுடன் மோதியது. அதில், 52-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதிபோட்டியில், ரத்தினம் கல்லுாரியுடன் மோதியது. அதில், 34-29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது. இதன் வாயிலாக, மாநில போட்டியில், கோவை மாவட்ட அணி சார்பில் பங்கேற்க நான்கு மாணவியர் தேர்வாகினர்.
தொடர்ந்து, வாலிபால் போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி மூன்றாமிடம் பிடித்தது. இவர்களுக்கு உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்போட்டியின் வாயிலாக மாநில அளவிலான போட்டிக்கு மூன்று மாணவியர் தேர்வாகினர்.
பாரதியார் பல்கலை கல்லுாரி அணிகள் இடையே மண்டல அளவிலான கபடி போட்டி, கோவை ஸ்ரீநாராயண குரு கல்லுாரியில் நடந்தது. என்.ஜி.எம்., அணி இப்போட்டியில் பங்கேற்று, அரையிறுதியில் ஸ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லுாரி அணியை, 53-24 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணியுடன் மோதி, 53-24- என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது.
தடகளத்தில், 1,500 மீ., ஓட்டத்தில் விகாஷினி மூன்றாமிடம் பிடித்து, ஆயிரம் ரூபாய்; நீளம் தாண்டுதலில் பிரபின் முதலிடம் பிடித்து, 3,000 ரூபாய்; 110 மீ., தடை தாண்டுதலில், அரவிந்த் முதலிடம் பிடித்து, 3,000 ரூபாய் பரிசுத் தொகை பெற்றனர். இவர்களை, கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் சீருடை வழங்கி வாழ்த்தினார்.