/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்தில் பாதுகாப்பாக பணியாற்ற அஞ்சல் ஊழியர்களுக்கு அறிவுரை
/
வனத்தில் பாதுகாப்பாக பணியாற்ற அஞ்சல் ஊழியர்களுக்கு அறிவுரை
வனத்தில் பாதுகாப்பாக பணியாற்ற அஞ்சல் ஊழியர்களுக்கு அறிவுரை
வனத்தில் பாதுகாப்பாக பணியாற்ற அஞ்சல் ஊழியர்களுக்கு அறிவுரை
ADDED : அக் 12, 2025 10:38 PM

வால்பாறை:வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமாக பணிபுரிய வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.
தேசிய அஞ்சல் வாரவிழாவையொட்டி, மனித - வனவிலங்கு மோதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை தபால் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி தலைமை வகித்தார்.
இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் பேசியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வனவிலங்குகளையும், வனங்களையும் பாதுகாப்பது நமது கடமை. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் தபால் துறை ஊழியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
மனித - வன விலங்கு மோதலை தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எஸ்டேட் பகுதியில் குறுக்கு வழித்தடத்தில் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்வதை தவிர்த்து, மக்கள் நடமாடும் ரோட்டிலேயே பாதுகாப்பான முறையில் சென்று வர வேண்டும். பாதுகாப்புடன் செயல்பட்டால் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க முடியும்.
இவ்வாறு, பேசினர்.
நிகழ்ச்சியில், வால்பாறை தபால் நிலை ஊழியர்கள், துணை அஞ்சலகம் மற்றும் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.