/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக்குல வர்ற நபர்கள் செயினை பறிக்கிறாங்க!
/
பைக்குல வர்ற நபர்கள் செயினை பறிக்கிறாங்க!
ADDED : அக் 12, 2025 10:40 PM
பொள்ளாச்சி:ஆனைமலையில் அடுத்தடுத்து நகை திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை ஆனைமலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆனைமலை அருகே, சக்தி சோயாஸ் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி, 30, என்பவர் மளிகை கடைக்கு சென்று பால் வாங்கி கொண்டு திரும்ப வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.அப்போது இருசக்கர வாகனத்தில், 'ெஹல்மெட்' அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அரை பவுன் தங்கச்செயினை பறிக்க முயற்சித்தனர்.
அதே போன்று, கணபதிபாளையம் முத்துலட்சுமி, 35, என்பவர், மீனாட்சிபுரம் - கோவிந்தாபுரம் ரோட்டில் மொபைல்போனில் பேசியபடி சென்றார். அவருக்கு பின்னால். இருசக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணிந்து வந்த இருவரும், கவரிங் செயினை பறிக்க முயற்சித்தனர்.
கேரளா பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், செயின் பறிக்க முயன்ற சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், ஆனைமலை போலீசார், ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'இந்த வீடியோவில் வரும் இருவரும், செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற நபர்களை கண்டாலோ, பைக்கை பார்த்தாலோ தகவல் தெரிவிக்கலாம்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.