UPDATED : அக் 11, 2026 06:51 PM
ADDED : அக் 11, 2026 06:46 PM

அ நிறம் | அளவு
மருதமலை: மருதமலை கோயில் கார் பார்க்கிங் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் கப் மற்றும் பேப்பர்களை வீசியதால், குப்பை குவிந்து கிடந்தது. இதுகுறித்து புகார்கள் எழுந்ததால், நேற்று கோயில் துாய்மை பணியாளர்கள் 30 பேர், வனப்பகுதியில் இருந்த 250 கிலோ குப்பையை அகற்றினர்.
கோயில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா மற்றும் வனவர் பிரியதர்ஷினி, வனக்காப்பாளர் சரவணகுமார் மேற்பார்வையிட்டனர்.
