/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நிலை தொட்டிகளில் துாய்மை பணி; நகராட்சி ஊழியர்கள் தீவிரம்
/
மேல்நிலை தொட்டிகளில் துாய்மை பணி; நகராட்சி ஊழியர்கள் தீவிரம்
மேல்நிலை தொட்டிகளில் துாய்மை பணி; நகராட்சி ஊழியர்கள் தீவிரம்
மேல்நிலை தொட்டிகளில் துாய்மை பணி; நகராட்சி ஊழியர்கள் தீவிரம்
ADDED : அக் 16, 2024 09:02 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மேல்நீலை நீர்த்தேக்க தொட்டிகள் துாய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு, அம்பராம்பாளையம் ஆறு அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, தினமும் 1.4 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர்உந்து நிலையம் வாயிலாக, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது குழாய் இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மின்தடை அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் துாய்மை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை மற்றும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள், மார்க்கெட் ரோடு நீர்உந்து நிலையத்தில் உள்ள சம்ப், தரை மட்ட தொட்டிகள், அம்ரபாம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
வெங்கடேசா காலனி தரைமட்ட நீர்தேக்க தொட்டி முழுவதும் வண்ணம் அடிக்கப்பட்டு பராமரிப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொட்டிகளும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்து, தினமும் காலையில், குளோரின் அளவு சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.