/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடிவேலு படத்துடன்தூய்மை பிரசாரம்
/
வடிவேலு படத்துடன்தூய்மை பிரசாரம்
ADDED : ஜன 02, 2026 05:13 AM

அன்னூர்: ஊரக வளர்ச்சி துறை சார்பில், தூய்மை பாரதம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் வீதம் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று வாகனங்களில் குப்பை சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு குப்பை கொண்டு செல்லப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது.
பல வீடுகள் மற்றும் கடைகளில் தூய்மை காவலருக்கு காத்திருக்காமல், நீர் நிலைகளில், வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நீர் நிலை மாசுபடுகிறது. இதையடுத்து கரியாம்பாளையம் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
”ஆறு, குளம், குட்டை ஆகிய இடங்களில் ஏன் குப்பைகளை கொட்டுகிறீர்கள். தினமும் தூய்மை காவலர்கள் வருகிறார்கள் அல்லவா?” என்று வடிவேலு கேட்பது போல் அச்சடித்துள்ளனர். சில ஊராட்சிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களை கவர்கின்றன.

