தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சீதோஷ்ண நிலையில் மாற்றம் கரும்பு சாகுபடிக்கு அட்வைஸ்

சீதோஷ்ண நிலையில் மாற்றம் கரும்பு சாகுபடிக்கு அட்வைஸ்

சீதோஷ்ண நிலையில் மாற்றம் கரும்பு சாகுபடிக்கு அட்வைஸ்


UPDATED : நவ 18, 2026 07:40 PM

ADDED : நவ 18, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:40 PM ADDED : நவ 18, 2026 07:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: பருவமழை சீசனில், கரும்பு தோகைகளை உரித்து விட்டம் கட்டுவதால், மகசூல் அதிகரிக்கும் என வேளாண் பல்கலை., யின் வானிலை அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், பரவலாக பருவமழை பெய்து இடைவெளி விட்டுள்ளது. இந்த சீதோஷ்ண நிலையில், பயிர் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, வேளாண் பல்கலை., வானிலை வெளியிட்டுள்ள அறிக்கை:

தொடர் மழையால், பருத்திச்செடிகளில், பூ மற்றும் மொட்டுகள் உதிர்வதை தடுக்க, நாப்தலின் அசிட்டிக் அமிலம், ஒரு லிட்டர் தண்ணீரில், 40 மில்லி கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

மழையுடன் காற்றின் வேகம் மணிக்கு, 10–14 கி.மீ., வரை வீச வாய்ப்புள்ளதால், ஐந்து மாதங்களுக்கு மேலான கரும்பில், தோகைகளை உரித்து விட்டம் கட்டினால், பயிர் வளர்ச்சி சீராகி, மகசூல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதே போல், வாழை சாகுபடியில், காற்றினால் மரங்கள் பாதிப்பதை தவிர்க்க, மூங்கில் குச்சிகளை கொண்டு, முட்டுக்கொடுக்கலாம்.

மரவள்ளி கிழங்கு சாகுபடியில், நுண்ணுாட்ட பற்றாக்குறையால், வெளிறல் காணப்பட்டால், ஒரு சதவீத பெரஸ் சல்பேட்டுடன், 0.5 சதவீத துத்துநாக சல்பேட் கலந்து தெளிப்பது அவசியமாகும்.

கால்நடைகளுக்கு நனைந்த தீவனங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கால்நடை கூடாரங்களின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us