/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எம்.சி., பள்ளியில் ஆண்டு விழா உற்சாகம்
/
சி.எம்.சி., பள்ளியில் ஆண்டு விழா உற்சாகம்
ADDED : ஜன 29, 2025 11:13 PM

கோவை; சிறுவாணி ரோடு, தீத்திப்பாளையத்தில் அமைந்துள்ள, சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. சி.எம்.சி., கல்வி நிறுவனங்களின் தலைவர் நாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய ராணுவ படைத்தலைவர் சுவாமி ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, ராணுவ சேவையின் முக்கியத்துவம், தேசப்பற்று, மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவது குறித்து பேசினார்.
தொடர்ந்து, கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் செயலாளர் லீமா ரோஸ், முதல்வர் பிரேமலதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.

