/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் நோய் தாக்குதல் தேங்காய் விலை கிலோ ரூ.60
/
தென்னையில் நோய் தாக்குதல் தேங்காய் விலை கிலோ ரூ.60
தென்னையில் நோய் தாக்குதல் தேங்காய் விலை கிலோ ரூ.60
தென்னையில் நோய் தாக்குதல் தேங்காய் விலை கிலோ ரூ.60
ADDED : ஜன 04, 2025 11:22 PM
கோவை:தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, ஈரோடு பகுதிகளில் தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள, தென்னை மரங்களில் அதிக அளவில் வேர் அழுகல், வெள்ளை பூச்சிகளின் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன.
மரங்கள் பட்டுப்போகின்றன. வளர்ந்த மரங்களின் ஓலைகள் சுருண்டு விடுகின்றன. தேங்காய் விளைச்சல் குறைந்து வருவதால், தேங்காய் விலை தற்போது கிலோ, 60 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆனைமலை தேங்காய் உற்பத்தி விவசாயிகள் சங்க இயக்குனர் மோகன்ராஜ் கூறியதாவது:
தென்னையில் கேரள வேர் அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விளைச்சல் இருக்காது. சர்வதேச அளவிலும் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. அம்பாரம்பாளையம், பாலக்காடு ரோடு, மீனாட்சிபுரம், குடிமங்கலம், உடுமலை போன்ற பகுதிகளிலும் விளைச்சல் குறைந்துள்ளது; விலை உயர்ந்துள்ளது. கொப்பரை விலையும், கிலோ 160 ஆக உயர்ந்துள்ளது. மே, ஜூன் மாதத்தில் விலை இன்னும் ஏற வாய்ப்புள்ளன. ஏப்ரல், மே மாதத்தில் இளநீர் விலை 50 ரூபாய் வரை உயரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

