/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரைக்கு அதிக விலையால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
/
கொப்பரைக்கு அதிக விலையால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
கொப்பரைக்கு அதிக விலையால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
கொப்பரைக்கு அதிக விலையால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 02, 2025 10:30 PM
அன்னுார்; ஏலத்தில் தேங்காய் கொப்பரைக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னுார்-சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை, வேளாண் விலை பொருட்கள் ஏல விற்பனை நடக்கிறது. நேற்று ஏலத்திற்கு 705 கிலோ தேங்காய் மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்திருந்தது.
உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வந்திருந்தனர். இதில் தேங்காய் கொப்பரை ஒரு கிலோ குறைந்தபட்சம் 175 ரூபாய் 16 பைசா முதல், அதிகபட்சமாக 182 ரூபாய் 10 பைசாவுக்கு விற்பனையானது. தேங்காய் ஒரு கிலோ 56 ரூபாய் 50 பைசாவுக்கு விற்கப்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், 'தேங்காய் கொப்பரைக்கு கடந்த ஓராண்டில் இதுவே அதிகபட்ச விலை ஆகும். மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் போதுமான தேங்காய் காய்ப்பதில்லை. காய்ப்பு குறைந்துள்ளது,' என்றனர்.