ADDED : ஜூலை 24, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது. இதில் 96 குவின்டால் எடையுள்ள 33 ஆயிரத்து 740 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்சம் 59 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 76 ரூபாய்க்கும் விற்பனையானது. தண்ணீர் இல்லாத தேங்காய் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.