/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாராந்திர ஏல விற்பனையில் தேங்காய் வரத்து சரிவு
/
வாராந்திர ஏல விற்பனையில் தேங்காய் வரத்து சரிவு
ADDED : ஆக 28, 2025 05:54 AM
அன்னுார்; வாராந்திர ஏல விற்பனையில் தேங்காய் வரத்து சரிந்தது.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன் தினம் வேளாண் விளைபொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது. ஏலத்திற்கு 8,970 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
குறைந்தபட்சம், ஒரு கிலோ 56 ரூபாய் முதல், அதிகபட்சம் ஒரு கிலோ 63 ரூபாய் வரை விற்பனையானது. இதன் மதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரத்து 128 ரூபாய் ஆகும். தேங்காய் பருப்பு 216 கிலோ விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ குறைந்தபட்சம் 170 ரூபாய் முதல், அதிகபட்சம் 216 ரூபாய் வரை விற்பனையானது. இதன் மதிப்பு 43 ஆயிரத்து 72 ரூபாய்.
22 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரங்களை விட தேங்காய் வரத்து சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.