/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி; பெண் தொழில்முனைவோர் கவுரவிப்பு
/
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி; பெண் தொழில்முனைவோர் கவுரவிப்பு
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி; பெண் தொழில்முனைவோர் கவுரவிப்பு
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி; பெண் தொழில்முனைவோர் கவுரவிப்பு
ADDED : ஜூலை 10, 2025 10:22 PM

கோவை; கோவை அனைத்து பெண் தொழில் முனைவோர்கள் சங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், 'காபி வித் கலெக்டர்' எனும், பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கோவை கலெக்டர் பவன்குமார் பேசுகையில்,''புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு சரியான வியாபாரத் திட்டம் இருக்க வேண்டும். தொழிலின் நிலைத்தன்மை அதில் தெரியும்.
பெண்கள் தொழில் துவங்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடனுதவிகளை வழங்குகின்றன. தரமான பொருட்களுக்கு மக்களிடத்தில் வரவேற்பு உள்ளது,'' என்றார்.அனைத்து பெண் தொழில் முனைவோர் சங்க இணைச்செயலர் ஸ்மிதா வரவேற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநர் லீமாரோஸ் மார்ட்டின், பார்க் கல்வி நிறுவனங்களில் தலைமை செயல் அலுவலர் அனுஷாரவி, சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை இணை இயக்குநர் நித்யா ராமச்சந்திரன், ஐஸ்வர்யா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் மருத்துவமனை இயக்குநர் சந்திரலேகா, கவுமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் தீபாமோகன்ராஜ், அப்பல்லோ ஐவரி டென்டல் மருத்துவ இயக்குநர் காயத்ரி, கோகிலாம் ஷாப்பிங் எக்ஸிபிசன் தலைமை செயல் அலுவலர் ஹீனாராகுல்ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.