/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை- 'ஆ' குறுமைய செஸ் போட்டி; 24 வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி
/
கோவை- 'ஆ' குறுமைய செஸ் போட்டி; 24 வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி
கோவை- 'ஆ' குறுமைய செஸ் போட்டி; 24 வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி
கோவை- 'ஆ' குறுமைய செஸ் போட்டி; 24 வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி
ADDED : ஜூலை 17, 2025 10:25 PM

கோவை; கோவை மாவட்டத்தில் 'ஆ' குறுமைய செஸ் போட்டியில் நேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியர், 24 பேர் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவை-அ, கோவை-ஆ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, சூலுார், மேட்டுப்பாளையம் என, எட்டு குறுமையங்களாக பிரிக்கப்பட்டு செஸ், சிலம்பம் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், கோவை-ஆ குறுமைய பள்ளி மாணவ, மாணவியருக்கு, 11, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நேற்று செஸ் போட்டி நடந்தது. போட்டிகளின் நிறைவில் மாணவ, மாணவியருக்கென தலா நான்கு பிரிவுகளிலும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
அதாவது, எட்டு பிரிவுகளில் வெற்றி பெற்ற, 24 பேர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.
தெற்கு குறுமையம்
தெற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டி குனியமுத்துாரில் உள்ள சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 240க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 11, 14, 17 மற்றும், 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி அறங்காவலர் ரவீந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.