/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - கோவா இடையே மீண்டும் விமான சேவை
/
கோவை - கோவா இடையே மீண்டும் விமான சேவை
ADDED : பிப் 19, 2024 01:27 AM
கோவை;தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவை - கோவா, இடையேயான விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டது.
கோவையிலிருந்து கோவா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை, கடந்த சில மாதங்களுக்கு முன் நிர்வாக காரணங்களுக்காக, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பிப்., முதல் வாரத்தில் இருந்து, விமான சேவை துவங்கியுள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகின்றன. கோவாவில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்டு, காலை, 11:25 மணிக்கு கோவை வந்தடையும்.
கோவையிலிருந்து மதியம் 12:00 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 1:15 மணிக்கு கோவா சென்றடையும். அதே போல், கோவையில் இருந்து கோவை - ஐதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை, வரும் 21ம் தேதி முதல், மீண்டும் துவங்கப்பட உள்ளது.

