/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! 17 கோரிக்கைகளை நிறைவேற்ற 17 வரை கெடு
/
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! 17 கோரிக்கைகளை நிறைவேற்ற 17 வரை கெடு
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! 17 கோரிக்கைகளை நிறைவேற்ற 17 வரை கெடு
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! 17 கோரிக்கைகளை நிறைவேற்ற 17 வரை கெடு
UPDATED : ஜன 09, 2026 07:36 AM
ADDED : ஜன 09, 2026 05:08 AM

கோவை பணி நிரந்தரம் உட்பட 17 அம்ச கோரிக்கைகளை 17ம் தேதிக்குள் நிறைவேற்ற தவறினால், 18ம் தேதி முதல் வேலை செய்ய மாட்டோம் என துாய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 1,900 நிரந்தர பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 525 ஒப்பந்த டிரைவர்கள் உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை சேகரிப்பை தனியாரிடம் ஒப்படைத்தது முதல், இவர்கள் அதிருப்தியில் உள்ளனர். பணி நிரந்தர எதிர்பார்ப்பில் இருந்த தற்காலிக துாய்மை பணியாளர்கள் கூலி உயர்வாவது தர வேண்டும் என கேட்கின்றனர்.
இத்துடன் வேறு பல கோரிக்கைகளையும் முன்வைத்து, 6 சங்கங்களை உள்ளடக்கிய 'வந்தே மாதரம்' கூட்டமைப்பு, மாநகராட்சிக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை, மெத்தனம் போன்ற காரணங்களால் நகரில் குப்பை மேலாண்மை ஏற்கனவே கேள்விக்குறியான சூழலில், காலவரையற்ற வேலை நிறுத்தம் மாநகரையே நாறடித்து விடும் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் தாமதம் இல்லாமல் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வரும் என கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.
கூட்டமைப்பு பொது செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வேன் என தேர்தலுக்கு முன் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சி முடியப்போகும் நேரம் வந்தும், கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. ஒப்பந்த பணியாளருக்கு கலெக்டர் அறிவித்த ரூ.721 தினக்கூலியையும் மாநகராட்சி வழங்கவில்லை. ஒப்பந்த பணியாளர் சம்பளத்தில், வைப்பு நிதிக்காக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்து 130 பிடித்தம் செய்கின்றனர். இப்படி 4,650 பேரிடம் ஆண்டுக்கு ரூ.23 கோடியே 31 லட்சம் வீதம் இரு ஆண்டுகளில் சுமார் ரூ.47 கோடி பிடித்தம் செய்துள்ளனர்.
ஆனால், பணியாளர்கள் ஓய்வு பெறும்போது பி.எப். பணம் தருவதில்லை. உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் வழங்கவில்லை. அது எங்கள் சம்பளத்தில் பிடித்த பணம். எங்கே போகிறது என்று தெரியவில்லை.
வேலை நேரத்திலும் நாங்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். பொதுமக்களுக்கு அவை தெரியவில்லை என்பதால், அவர்கள் எங்கள் மீது கோபப்படுகின்றனர். எனவே, இப்போதாவது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டாக வேண்டும். இல்லையேல் போராட்டம் உறுதி.
இவ்வாறு பிரபு கூறினார்.

