/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி ஒதுக்கீட்டில் கோவைக்கு முன்னுரிமை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ADDED : ஜன 14, 2025 09:37 PM
அன்னுார்:
'தமிழக அரசு கோவை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது,' என, அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெரிவித்தார்.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா வெள்ளானைப்பட்டியில், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தி.மு.க.,வினர், 80 பேருக்கு, தலா 5,000 ரூபாய் ரொக்கத்துடன், பொற்கிழி, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு உதவி பொருட்களை 1,200 பேருக்கு வழங்கி, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு அதிக முறை வந்துள்ளார். தொழில் துறையில் முன்னேறிய, கோவை மாவட்டத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில், கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, பேரூராட்சி செயலர் சுரேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.