/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 9,635 டன் உரம் கையிருப்பு
/
கோவையில் 9,635 டன் உரம் கையிருப்பு
ADDED : ஆக 29, 2025 01:30 AM
கோவை; கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை:
கோவை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் உணவு தானிய பயிர்கள் 4,133 ஹெக்டர் பரப்பிலும், பயறு வகை பயிர்கள் 762 ஹெக்டர், பருத்தி 73 ஹெக்டர், கரும்பு 176 ஹெக்டர், எண்ணெய் வித்து பயிர்கள் 1,362 ஹெக்டர் என, மாவட்டம் முழுதும் 6,506 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலை பயிர்களான தென்னை, வாழை, கொய்யா, மஞ்சள் மற்றும் மலைப்பயிர்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 379 ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இப்பயிர்களுக்குத் தேவையான உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உர விற்பனையகங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன. தற்போது யூரியா 1,121 டன், டி.ஏ.பி., 1,813 டன், பொட்டாஷ் 1,851 டன், சூப்பர் பாஸ்பேட் 1,495 டன், காம்ப்ளெக்ஸ் 3,355 டன் என, மொத்தம் 9,635 டன் கோவை மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதத்துக்கும் கணக்கிட்டு உரம் ஒதுக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவை மாவட்ட விவசாயிகள், உரங்கள் குறித்த தகவல்களுக்கு 96984 14591, 85087 45770 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.