தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை ஐ.சி.ஏ.ஐ., புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை ஐ.சி.ஏ.ஐ., புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை ஐ.சி.ஏ.ஐ., புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு


ADDED : பிப் 19, 2024 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துடியலூர்:துடியலூரில், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) கோவை கிளைக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியில், தலைவராக விஷ்ணு ஆதித்தன், துணைத் தலைவராக ராகுல் சந்திரசேகரன், செயலாளராக சர்வஜித் கிருஷ்ணன், பொருளாளராக சதீஷ், மாணவர் அமைப்பு தலைவராக தங்கவேல் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஐ.சி.ஏ.ஐ., அகில இந்திய முன்னாள் தலைவர் ராமசாமி, கோவை கீதாஞ்சலி பள்ளியின் தாளாளர் அழகிரிசாமி, தென் மண்டல உறுப்பினர் ராஜேஷ், தென் மண்டல செயலாளர் அருண், தென் மண்டல முன்னாள் தலைவர் ஜலபதி, கோவை கிளை முன்னாள் தலைவர் நாககுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us