/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலை சந்திக்க கோவை தயார்! கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
/
தேர்தலை சந்திக்க கோவை தயார்! கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
தேர்தலை சந்திக்க கோவை தயார்! கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
தேர்தலை சந்திக்க கோவை தயார்! கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
ADDED : பிப் 08, 2024 09:10 PM
''லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு கோவை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது,'' என, கோவை மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாநிலம் வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதுா, முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை வந்தனர்.
அங்கிருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை, மொத்த வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, பதற்றமான ஓட்டுச்சாவடி, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடி, கடந்த தேர்தல்களில் நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை, மாவட்டத்தின் எல்லை, மாநிலத்தின் எல்லை பகுதிகள், எத்தனை சோதனை சாவடிகள் இருக்கின்றன. தேர்தலுக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து விபரமாக கேட்டறிந்தனர்.
கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்திகுமார், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அலுவலரான டி.ஆர்.ஓ., ஷர்மிளா, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''தேர்தல் முன்னேற்பாடு, சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கேட்கப்பட்டது.
''தேர்தல் நடத்துவதற்கு கோவை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் நடத்துவற்கான ஏற்பாடுகள், சிறப்பாக இருப்பதாக ஆணையம் தெரிவித்தது,'' என்றார்.
- நமது நிருபர் -

