UPDATED : நவ 02, 2026 03:48 PM
ADDED : நவ 02, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் ஒன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி. உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
கோவை நைட்ஸ் அணியினர் 43 ஓவரில் 263 ரன் எடுத்தனர். ஜிதேந்தர் குமார் 74, நவின் 65, முகமது ரபி 63 ரன் எடுத்தனர். எதிரணியின் ராஜ்குகன் 4, தினேஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர். ஜாலி ரோவர்ஸ் அணியினரோ 43 ஓவரில் 223 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். செந்துார் 65, கவுசிக் 54, நிர்மல்குமார் 50 ரன் எடுத்தனர். எதிரணியின் செல்வகுமரன் 4 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
