ADDED : பிப் 22, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், அகில இந்திய வக்கீல் சங்கம், சிவில் உரிமை கழகம் உள்ளிட்ட அமைப்பு சார்பில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.