sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்னர்வீல் கிளப் சார்பில் குட்டீஸ் கலக்கல் 2011

/

இன்னர்வீல் கிளப் சார்பில் குட்டீஸ் கலக்கல் 2011

இன்னர்வீல் கிளப் சார்பில் குட்டீஸ் கலக்கல் 2011

இன்னர்வீல் கிளப் சார்பில் குட்டீஸ் கலக்கல் 2011


ADDED : ஜூலை 31, 2011 03:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'இன்னர்வீல் கிளப்' @காவை (வடக்கு) சார்பில் 'குட்டீஸ் கலக்கல் 2011' என்னும் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி கோவை பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. பேன்ஸி டிரஸ் போட்டியுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், பெயிண்டிங், பாடல்கள் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10.00 மணி முதல் கிராமிய நடனமும் பகல் 2.00 மணி முதல் வெஸ்டர்ன் நடனமும் நடக்கவுள்ளது. இதில் தனிநபராகவோ, குழுவாகவோ பங்கேற்கலாம். இப்போட்டிகளில் பங்கேற்க 30 மற்றும் 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'இன்னர் வீல் கிளப்' கோயம்புத்தூர்(வடக்கு) தலைவர் மீராசங்கரன் கூறுகையில், 'இன்னர் வீல் கிளப்' கோயம்புத்தூர்(வடக்கு) சார்பாக, பள்ளிகளைத் தத்தெடுத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு உபகரணங்கள் மற்றும் புத்தகம், நோட்டு வழங்குதல், முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கு மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலப்பணிகள் செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு கோவை நகரம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கண்டறிதல், சிகிச்சைக்கு உதவுதல் என்கிற குறிக்கோளுடன் இயங்குகிறோம். 'குட்டீஸ் கலக்கல் 2011'ல் பங்கேற்க மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறிய நிதியானது, இது மாதிரியான பெரிய காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது,' என்றார்.முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, 99943 36721 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us