/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு நாட்களில் 3 ஆயிரம் வருமான வரி படிவம் தாக்கல்
/
நான்கு நாட்களில் 3 ஆயிரம் வருமான வரி படிவம் தாக்கல்
நான்கு நாட்களில் 3 ஆயிரம் வருமான வரி படிவம் தாக்கல்
நான்கு நாட்களில் 3 ஆயிரம் வருமான வரி படிவம் தாக்கல்
ADDED : ஆக 01, 2011 10:50 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் நான்கு நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வருமான வரி படிவம் தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை செயல்பட்டது.பொள்ளாச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பலதரப்பட்ட மக்களும் கோவை வருமான வரி அலுவலகத்திற்கு சென்று தாக்கல் செய்தனர். அதிகளவிலான மக்கள் 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்., 2011 முதல் ஜூலை 31ம் தேதி வரை 6,000க்கும் மேற்பட்ட படிவங்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 50 சதவீதம் (3,000) செய்யப்பட்டுள்ளது, என்றனர்.