/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை கொண்டை ஊசி வளைவில் அமைச்சர்கள் ஆய்வு
/
வால்பாறை கொண்டை ஊசி வளைவில் அமைச்சர்கள் ஆய்வு
ADDED : ஆக 03, 2011 01:28 AM
வால்பாறை : சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த கொண்டை ஊசி வளைவுகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.வால்பாறை வந்த வனத்துறை அமைச்சர் பச்சைமால் யானை வழித்தடத்தை ஆய்வு செய்த பின்னர் அட்டகட்டிக்கு சென்றார்.
அங்கு தொழில்துறை அமைச்சர் வேலுமணியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பொள்ளாச்சி செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்ந்த 9 வது கொண்டை ஊசி வளைவில் நின்றபடி ஆழியார் அணையின் எழில் மிகு தோற்றத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். சுற்றுலாப்பயணிகள் நலன் கருதி இந்தப்பகுதியில் தேவையான வசதிகள் செய்து கொடுக்க அதிகாரிகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களுடன் பொள்ளாச்சி எம்.பி.சுகுமார், வால்பாறை சட்டசபை தொகுதி செயலாளர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.