/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத் திறனாளி மாணவரின் ஆராய்ச்சிக்கு யு.ஜி.சி., நிதியுதவி
/
மாற்றுத் திறனாளி மாணவரின் ஆராய்ச்சிக்கு யு.ஜி.சி., நிதியுதவி
மாற்றுத் திறனாளி மாணவரின் ஆராய்ச்சிக்கு யு.ஜி.சி., நிதியுதவி
மாற்றுத் திறனாளி மாணவரின் ஆராய்ச்சிக்கு யு.ஜி.சி., நிதியுதவி
ADDED : ஆக 05, 2011 01:32 AM
கோவை : 'சேவைசார் கட்டமைப்பு' குறித்த ஆய்வை மேற் கொள்ள, பொள்ளாச்சி
என்.ஜி.எம். கல்லூரி மாணவர் புஷ்பராஜ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.பல்கலை
மானியக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், ஆராய்ச்சி காலம் முழுவதும்
மாதம் 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற, மத்திய அரசின் சிறுபான்மை யினர்
அமைச்சகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சிறு வயதில் போலியோ
பாதித்து புஷ்பராஜின் இடது கால் ஊனமானது. ஒரு கால் முடங்கினாலும்,
தன்னம்பிக்கையை தளர விடாமல் இருந் தார். பள்ளிக் கல்வியை திருப்பூரி லும்,
இளங் கலை பட் டப்படிப்பை திருச்சி புனித ஜோசப் கல் லூரியிலும், எம்.சி.
ஏ., பட்டத்தை சென்னை லயோலா கல்லூரி யிலும் படித்தார்.
நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகவும், இரண்டு ஆண்டுகள் மென்பொருள்
வல்லுனராகவும் பணிபுரிந்து வந்த புஷ்பராஜ், முழு நேர ஆராய்ச்சியாளராக
மாறியுள்ளார். சேவை சார் கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக தேர்வு
செய்யப்பட் டுள்ளார். இதற்காக இவர் விரைவில் அமெ ரிக்கா செல்லவுள்ளார்.
இவருக்கு, என்.ஜி. எம்., கல்லூரியின் முதல்வர் பத்ரி ஸ்ரீமன் நாராயணன்,
கம்ப்யூட் டர் சயின்ஸ் துறைத் தலைவர் ஆன்டனி செல்வதாஸ் தனமணி, அறிவியல்
துறை பேரா சிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.