sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் திருச்சி ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை

/

கோவையில் திருச்சி ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை

கோவையில் திருச்சி ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை

கோவையில் திருச்சி ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை


ADDED : ஆக 05, 2011 01:36 AM

Google News

ADDED : ஆக 05, 2011 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவியின் மூளையாக செயல்பட்டு, தலைமறைவான திருச்சி சோமு, நேற்று கோவையில் கூலிப்படையினரால் ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்டார்.திருச்சி, பொன்மலையைச் சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம்(43). ஆறு மாதங்களுக்கு முன், கூட்டாளிகள் மூவருடன் கோவை வந்த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகக் கூறி, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கணபதி நகரில் வாடகைக்கு பங்களா பிடித்து, தங்கினார்.நேற்று காலை கூட்டாளிகளுடன் வாக்கிங் சென்றவர், 8.10 மணிக்கு வீட்டருகே பேக்கரியில் டீ குடிக்கச் சென்றார். அப்போது, வேகமாக வந்த ஸ்கார்ப்பியோ கார் சோமுவை வழிமறித்தது.சோமு தப்பியோட முயன்றபோது, காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கும்பல், அரிவாளால் தலை, கழுத்து, கை, கால்களில் சரமாரியாக வெட்டியது. பின்னர், காரில் ஏறி தப்பியது.தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த உதவி கமிஷனர் சந்திரமோகன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் விசாரணையை துவக்கினர்.

மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி அங்கு சென்று விசாரித்தார். விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர், திருச்சியில் பிரபல ரவுடி என்றும், அங்கு கொலை, கொலை மிரட்டல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்றும் தெரிந்தது. பலரை மிரட்டி நிலங்களை வாங்கியதாவும் இவர் மீது போலீசில் புகார் உள்ளது. ஆரம்ப காலத்தில் இவர், திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி, போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 'முட்டை' ரவி மூளையாக செயல்பட்டவர். பிரபல ரவுடியாக பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில், முட்டை ரவியை காட்டிக் கொடுத்துள்ளார்.இதேபோல், அடுத்தடுத்த காலங்களில் போலீஸ் என்கவுன்டரில் பிரபல ரவுடிகள் திண்டுக்கல் பாண்டி, மணல்மேடு சங்கர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் சாவுக்கும் திருச்சி ரவுடி சோமு காரணமாக இருந்துள்ளதாக, இறந்த ரவுடிகளின் ஆதரவாளர்கள் நம்பியுள்ளனர். தலைமறைவான சோமு, கோவை, சிங்காநல்லூரில் இருப்பதை கண்டுபிடித்த கூலிப்படையினர், அவரது நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். நேற்று காலை சென்னை பதிவு எண் கொண்ட காரில் வந்த கூலிப்படையினர் சோமுவை வழிமறித்து சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியுள்ளனர். தனிப்படை: இச்சம்பவம் பற்றி விசாரிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையின் ஒரு குழு திண்டுக்கல்லுக்கும், மற்றொன்று திருச்சிக்கும் விரைந்துள்ளது.வாகன சோதனை: கூலிப்படையினர் வந்த வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ கார், சென்னை பதிவு எண்ணை கொண்டது. இதில், திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் தான் வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட, கோவை மாநகர போலீஸ், கொலை சம்பவத்துக்குபின், சம்பந்தப்பட்ட வாகனத்தை பிடிக்க, வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.ஆனால், கூலிப்படையினர் வந்த காரை கண்டுபிடிக்க முடியவில்லை.






      Dinamalar
      Follow us