sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சி.எஸ்.ஐ., திருச்சபை வழக்கு: குற்றப்பத்திரிகை வழங்கல் ஒத்திவைப்பு

/

சி.எஸ்.ஐ., திருச்சபை வழக்கு: குற்றப்பத்திரிகை வழங்கல் ஒத்திவைப்பு

சி.எஸ்.ஐ., திருச்சபை வழக்கு: குற்றப்பத்திரிகை வழங்கல் ஒத்திவைப்பு

சி.எஸ்.ஐ., திருச்சபை வழக்கு: குற்றப்பத்திரிகை வழங்கல் ஒத்திவைப்பு


ADDED : ஆக 20, 2011 11:33 PM

Google News

ADDED : ஆக 20, 2011 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,:சி.எஸ்.ஐ., திருச்சபை வழக்கில், முன்னாள் பிஷப் ஆஜராகததால் குற்றப்பத்திரிகை வழங்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை மண்டல சி.எஸ்.ஐ., திருச்சபை பிஷப்பாக இருந்தவர் மாணிக்கம்துரை. இவர் மீது திருச்சபை உறுப்பினர் பிரேம்குமார் மோசடி புகார் தொடுத்திருந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார்

வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிறிஸ்தவ அமைப்புகள் பலவற்றில் 3 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டறிந்தனர். 7 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக சென்னை, ஐகோர்ட் வழங்கிய தடை உத்தரவு காரணமாக குற்றவாளிகள் ஆஜராவதற்கு விலக்கு பெற்றனர். இந்நிலையில், இவர்கள் மீண்டும் தடை ஆணைக்கு விண்ணப்பித்தனர்; சென்னை, ஐகோர்ட் தடை ஆணை வழங்க மறுத்து, குற்றவாளிகளை கோவை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இவ்வழக்கு நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க குற்றப்பத்திரிகை தயாராக இருந்த நிலையில், மூவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, குற்றப்பத்திரிகை வழங்குவதை செப்., 20க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us