sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரமடை ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

/

காரமடை ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

காரமடை ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

காரமடை ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்


ADDED : செப் 20, 2011 01:06 AM

Google News

ADDED : செப் 20, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை : காரமடை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரூராட்சியில் 21 ஆயிரத்து 159, ஒன்றியத்தில் 90 ஆயி ரத்து 573 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை நல்ல முறையில் நடத்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காரமடை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 21 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தேர்தல் நடத்தும் அலுவலராக செயல் அலுவலர் சுப்ரமணியமும், ஒன்று முதல் 9 வார்டுகளுக்கு தலைமை எழுத்தர் ரேணுகா, 10 முதல் 18 வார்டுகளுக்கு சுகாதார ஆய்வாளர் மருதாசலம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சியில் மொத்தம் 26 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். காரமடை ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 17 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் மொத்தம் 90 ஆயிரத்து 573 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப்போட 173 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்த கோவை கலால் துறை உதவி கமிஷனர் சாந்தி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர் விஜயசித்ரா, மாவட்ட தாட்கோ மேலாளர் கல்யாணி ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காரமடையில் 21 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அருமைதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.டி.ஒ., ராதாகிருஷ்ணன் ஒன்று முதல் 6 வார்டுகளுக்கும், கலால் துறை அதிகாரி ராணி 7 லிருந்து 11 வார்டுகளுக்கும், கோ-ஆப்ரேட்டிவ் துறை சார் பதிவாளர் பரமசிவம் 12 லிருந்து 16 வார்டுகளுக்கும், கோவை தனி தாசில்தார் பழனியம்மாள் 17 லிருந்து 21 வார்டுகளுக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.காரமடை ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடத்த பி.டி.ஒ., முகமது கான் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி பி.டி.ஓ., மனோகரன் பெள்ளாதி, பெள்ளேபாளையம், சிக்கதாசம்பாளையம், சிக்காரம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டி, இலுப்பநத்தம் ஆகிய ஊராட்சிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். உதவி பி.டி.ஒ., பார்த்திபன், இரும்பறை, ஜடையம்பாளையம், காளம்பாளையம், மருதூர், முடுதுறை, கெம்மாரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தங்கவேல், நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு ஆகிய ஊராட்சிகளுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us