/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் நிற்காத பஸ்கள்
/
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் நிற்காத பஸ்கள்
ADDED : செப் 20, 2011 11:43 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் சில டவுன்
பஸ்கள் அங்கேயே நிறுத்தாமல், பழைய பஸ் ஸ்டாப் அருகே சென்று
நிறுத்துகின்றனர்.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு
சிரமமாகவும் இருந்து வருகிறது. கிணத்துக்கடவில் கட்டப்பட்ட புதிய பஸ்
ஸ்டாண்டுக்குள் பொள்ளாச்சியில் இருந்து புறநகர் பஸ்களும், பொள்ளாச்சி,
கோவை செல்லும் டவுன் பஸ்கள் நுழைந்து செல்கின்றன. ஆனால், கோவையில் இருந்து
வரும் புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் முன்பு நிறுத்தி செல்கிறது.
இந்நிலையில், சில டவுன் பஸ்கள் பெயரளவிற்கு பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ளே
நுழைந்து சென்றுவிட்டு, உடனடியாக கிளம்பி பழைய கோவை செல்லும் பஸ்ஸ்டாப்பில்
நிறுத்திக் கொள்கின்றன. ஏற்கனவே இந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்கள்
நிறுத்தும்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறு விபத்துக்கள்
ஏற்பட்டு வந்தது. தற்போது, பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டபோதும், சில டவுன் பஸ்கள்
பழைய பஸ்ஸ்டாப்பில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
அவ்வாறு செல்லும் டவுன் பஸ்களினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு
வருகின்றனர். பஸ்ஸ்டாண்டுக்குள் செல்லாத பஸ்கள் மீது போக்குவரத்து
துறையும், வட்டார போக்குவரத்து அதிகாரியும் கடும் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர். இருப்பினும், சில பஸ் டிரைவர்கள் அதனை கண்டு கொள்ளாமல்
அலட்சியமாக இருந்து வருகின்றனர். அவ்வாறு நிறுத்தி வரும் டவுன் பஸ்
டிரைவர்கள் மீது போக்குவரத்துறையினரும், வட்டார போக்குவரத்து அதிகாரியும்
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.