/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வடக்கை இரண்டாக பிரித்து பெ.நா.பாளையம் தாலுகா! பொதுமக்கள் விருப்பம் நிறைவேறுமா
/
கோவை வடக்கை இரண்டாக பிரித்து பெ.நா.பாளையம் தாலுகா! பொதுமக்கள் விருப்பம் நிறைவேறுமா
கோவை வடக்கை இரண்டாக பிரித்து பெ.நா.பாளையம் தாலுகா! பொதுமக்கள் விருப்பம் நிறைவேறுமா
கோவை வடக்கை இரண்டாக பிரித்து பெ.நா.பாளையம் தாலுகா! பொதுமக்கள் விருப்பம் நிறைவேறுமா
ADDED : மார் 11, 2025 11:33 PM

பெ.நா.பாளையம்: கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய தாலுகா அலுவலகம் உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.
கோவை வடக்கு தாலுகாவில் கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இதில் பெரியநாயக்கன்பாளையத்தில் தாலுகா அலுவலகம் அமைப்பதால் அனைத்து பகுதிகளில் இருந்தும் பெரியநாயக்கன்பாளையத்துக்கு சுலபமாக வந்து செல்லலாம்.
பெரியநாயக்கன்பாளையம் பிர்காவில் நாயக்கன்பாளையம், கூடலுார், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பிளிச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன.
துடியலுார் பிர்காவில் எண். 24 வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, சோமையம்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலுார் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன.
பொதுவாக, மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய் துறை தொடர்பான அரசு பணிகளும் வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும். இதை வட்டாட்சியர் தன்னுடைய கீழ் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரிவித்து, அதை செயல்படுத்துவார்.
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பெயரில் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், நில உடமை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
வட்டாட்சியமைப்புக்குள் மக்களிடையே பிரச்னைகள் ஏதும் வந்தால், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும், வட்டாட்சியர் செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவியல் நிர்வாக பணிகளில் வட்ட குற்றவியல் நடுவராக பணியாற்றுதல், வட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரித்தல், அவசர காலத்தில் இருப்பு பாதையை கண்காணிக்க தக்க நடவடிக்கை எடுத்தல், கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல், காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருள்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம் வட்டாரங்களில் வேகமாக குடியிருப்புகளும், அதன் தொடர்பாக சட்ட பிரச்னைகளும், வருவாய்த்துறை பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், துடியலுார், கவுண்டம்பாளையம் பகுதிகளில் உருவாக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், கோவை மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டு விட்டது.
எனவே, வருவாய் துறையின் வசதிக்காக, சட்டம் - ஒழுங்கு பராமரிக்கவும், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களைப் பெற, நீண்ட தூரம் அலைவதை தடுக்க, கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய தாலுகா அலுவலகத்தை அமைக்க முன்வர வேண்டும்.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட சாமநாயக்கன்பாளையம், காளி பாளையம் உள்ளிட்ட பகுதிகளையும், பெரியநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.