/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழாவது சுற்று செஸ் போட்டியில் கோவை வீரர் கிரிமன் 'சபாஷ்'
/
ஏழாவது சுற்று செஸ் போட்டியில் கோவை வீரர் கிரிமன் 'சபாஷ்'
ஏழாவது சுற்று செஸ் போட்டியில் கோவை வீரர் கிரிமன் 'சபாஷ்'
ஏழாவது சுற்று செஸ் போட்டியில் கோவை வீரர் கிரிமன் 'சபாஷ்'
ADDED : நவ 19, 2025 01:22 AM
கோவை: தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 36வது ஐ.எம்., நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் செஸ் போட்டி கடந்த, 14 முதல் வரும், 20ம் தேதி வரை, காந்திபுரம் அலங்கார் ஹோட்டலில் நடக்கிறது. இப்போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த ஐவர், தமிழகத்தில் மூவர் உட்பட இந்தியாவில் இருந்து ஐவர் என, 10 பேர் விளையாடி வருகின்றனர்.
ஏழாம் சுற்று போட்டியின் முடிவில், கோவை வீரர் கிரிமன், 5.5 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். கியூபா வீரர் டயாஸ்மனி ஓடெரோ அகோஸ்டா, பெலாரஸ் வீரர் எவ்ஜெனீ போடோல்சென்கோ ஆகியோர் தலா ஐந்து புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
குஜராத் வீரர் விவான் விஷால் ஷா, 4.5 புள்ளிகள், கொலம்பியா வீரர் வில்சன் கில்லெர்மோ பாலென்சியா மோராலஸ், சென்னை வீரர் ஹரி கணேஷ் ஆகியோர் தலா மூன்று புள்ளிகள், விருதுநகர் வீரர் குமரேஷ், மகாராஷ்டிராவின் ஜெய்வீர் மஹேந்திரு ஆகியோர் தலா, 2.5 புள்ளிகளும், பெரு வீரர் கார்லோமக்னோ ஒப்லிடாஸ், அர்ஜென்டினா வீரர் ரவுல் கிளவெரி ஆகியோர் தலா, 2 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

