/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கராத்தே போட்டி: கோவை வீரர்கள் அபாரம்
/
தேசிய கராத்தே போட்டி: கோவை வீரர்கள் அபாரம்
ADDED : நவ 19, 2025 01:21 AM

கோவை: தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி, மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த, 14 முதல், 17ம் தேதி வரை நடந்தது. இதில், சென்னை மாணவர் சாய் கிரித்திஷ் தங்கம் வென்று இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தவிர, அவதார் பள்ளி மாணவர் ஆஸ்டின் அஜய் வெள்ளிப் பதக்கமும், எல்.ஜி., பப்ளிக் பள்ளி மாணவர் பிரணவ ரிஷி வெண்கல பதக்கமும், சிங்காநல்லுார் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவர் ஹாரிஸ் மார்க் டேனியல் வெண்கல பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற வீரர்களை, கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராஜா, பயிற்சியாளர் தென்னீஷன் ஆகியோர் பாராட்டினர்.

