/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் பதிவில் சாதிக்கும் கோவை தபால் கோட்டம்; கடந்த ஜன., முதல் மார்ச் வரை அபாரம்
/
ஆதார் பதிவில் சாதிக்கும் கோவை தபால் கோட்டம்; கடந்த ஜன., முதல் மார்ச் வரை அபாரம்
ஆதார் பதிவில் சாதிக்கும் கோவை தபால் கோட்டம்; கடந்த ஜன., முதல் மார்ச் வரை அபாரம்
ஆதார் பதிவில் சாதிக்கும் கோவை தபால் கோட்டம்; கடந்த ஜன., முதல் மார்ச் வரை அபாரம்
ADDED : ஏப் 14, 2025 06:59 AM

கோவை : அரசு மற்றும் தனியார் துறை சார்பில், ஆதார் பதிவு மேற்கொள்ளப்படும் நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை, 43 சதவீத ஆதார் பதிவுகள், தபால் துறையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு சாதித்துள்ளது.
ஆதார் எண், பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவை பெற அவசியமாகிறது. ஆதார் பெற, பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் சார்பிலும், தனியார் சார்பிலும் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பதிவில், தபால் துறையின் கோவை கோட்டம் சாதித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் துறை சார்பில், ஆதார் பதிவு மேற்கொள்ளப்படும் நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை கணக்குகளின் படி, 43 சதவீத ஆதார் பதிவுகள், தபால் துறையின் கோவை கோட்டத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு சாதித்துள்ளது. தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லுாரிகள், மக்கள் அதிகமாக திரளும் இடங்கள், திருமண மண்டபங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
தபால் துறையின் கோவை கோட்டம் சார்பில், 2023 ஏப்., முதல் 2024 மார்ச் வரை, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 511 ஆதார் பதிவுகள், 2024 ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை, 2 லட்சத்து ஐந்தாயிரத்து 740 ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக கடந்தாண்டு ஏப்., முதல் கடந்த பிப்ரவரி வரை 252 முகாம்கள் அமைக்கப்பட்டன.
இந்த ஆதார் பதிவுகள், விபத்து காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம், 'தாய் அகார்' கடிதம் எழுதும் போட்டியில், மாணவர்களை அதிகளவு பங்களிப்பு செய்தது என, தமிழக வட்ட அளவில், கோவை கோட்டம் சிறப்பிடம் பெற்றதற்காக, சமீபத்தில், கோவை கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கருக்கு விருது வழங்கப்பட்டது.