/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் மூன்றாண்டுகளில் பெண் குழந்தை பிறப்பு உயர்வு 1000க்கு 974 பெண் குழந்தை
/
கோவையில் மூன்றாண்டுகளில் பெண் குழந்தை பிறப்பு உயர்வு 1000க்கு 974 பெண் குழந்தை
கோவையில் மூன்றாண்டுகளில் பெண் குழந்தை பிறப்பு உயர்வு 1000க்கு 974 பெண் குழந்தை
கோவையில் மூன்றாண்டுகளில் பெண் குழந்தை பிறப்பு உயர்வு 1000க்கு 974 பெண் குழந்தை
ADDED : ஜன 16, 2025 03:40 AM
கோவை: கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்ந்துள்ளது.
2023-24ம் ஆண்டில் கோவையில், 23,930 ஆண் குழந்தைகளும், 23,302 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. இதன் படி, பெண்களின் பிறப்பு விகிதம், 974 என்ற அளவில் உள்ளது. அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு, 974 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
தமிழக அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம், குறைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், ஒரு சில மாவட்டங்களில் குறைந்து வருகிறது.
ஆனால், கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, இடிகரை, இருகூர், நரசீபுரம், பூச்சியூர், சொக்கனுார், வாகராயம்பாளையம், அரிசிபாளையம், எஸ்.எஸ்.குளம், கவுண்டம்பாளையம், குனியமுத்துார், ரத்தினபுரி, சுக்கிரவார்பேட்டை போன்ற சில இடங்களில், ஆண் குழந்தை பிறப்புக்கு இணையாகவும், அதிகமாகவும், 2023-24ல் பெண் குழந்தைகள் பிறப்பு பதிவாகியுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமியிடம் கேட்டபோது, ''கோவையில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம், கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. மாநில விகிதத்தை காட்டிலும், கோவையில் அதிகம்.
மொத்த பிறப்பு விகித புள்ளிவிபரங்களின் படி, 2021-22ல் 44,291 குழந்தைகளும், 2022-2023ல் 47,707 குழந்தைகளும், 2023-24ல் 47, 232 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.
பிறப்பு விகிதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில், மிகச்சிறிய மாற்றங்கள் உள்ளன; இதில் குறைந்தது என்று ஓராண்டை வைத்து கூறமுடியாது. 2021-22 ஒப்பிடுகையில் அதிகரித்துதான் உள்ளது,'' என்றார்.