/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய சைக்கிள் போலோவில் கோவை மாணவியர் அசத்தல்
/
தேசிய சைக்கிள் போலோவில் கோவை மாணவியர் அசத்தல்
ADDED : ஜன 30, 2024 12:01 AM
கோவை;மத்திய பிரதேசத்தில் நடந்த, தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில், கோவை மாணவியர் சிறப்பாக விளையாட, தமிழக அணி மூன்றாமிடம் பிடித்தது.
தேசிய அளவிலான ஜூனியர் மாணவியருக்கான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்தது.
இப்போட்டியில் பங்கேற்ற, தமிழக அணி மூன்றாமிடத்துக்கான போட்டியில், கேரள மாநில அணியை, 9 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வெண்கலப்பதக்கம் வென்றது.
இதில் வி.எல்.பி., ஜானகியம்மாள் பள்ளி மாணவி வர்ஷிகா, நிர்மல மாதா பள்ளி ஸ்வஷ்திகா, மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., மாணவியர் தன்யாஸ்ரீ, நேசிகா, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி அமிர்தபிரியா, குளத்துப்பாளையம் அரசு பள்ளி மாணவி கலை காவியா, வேளாண் பல்கலை மாணவி மோகனா ஆகியோர், தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடி, அணியின் வெற்றிக்கு உதவினர்.
வெற்றி பெற்ற மாணவியரை, தமிழக சைக்கிள் போலோ சங்க தலைவர் ரமேஷ் குமார், செயலாளர் அனந்தராமன், பயிற்சியாளர்கள் அருண், ரூபா உள்ளிட்டோர் பாராட்டினர்.