/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கால் டாக்சி டிரைவர் முன்விரோதத்தில் கொலை
/
கோவை கால் டாக்சி டிரைவர் முன்விரோதத்தில் கொலை
ADDED : டிச 11, 2025 05:05 AM

வேடசந்துார்: --: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் குங்கும காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் 27. கோவையில் தங்கி கால் டாக்சி ஓட்டி வந்தார்.
இரு மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த இவருக்கு அதே தெருவில் டாஸ்மாக் கடை அருகே மீன் கடையில் வேலை பார்க்கும் லட்சுமணன்பட்டி முத்துக்குமார் 24, என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது . இதனிடையே இரு நாட்களுக்கு முன் ஊருக்கு வந்த செந்தில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு முத்துக்குமார் வேலை பார்க்கும் கடைக்கு சென்று தகராறு செய்தார்.
இந்நிலையில் நண்பர்களுடன் நாகம்பட்டி பகுதியில் டூவீலரில் சென்ற செந்திலை தானும் டூவீலரில் பின் தொடர்ந்து சென்ற முத்துக்குமார் அவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் செந்தில் இறந்தார். முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

