/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் திருப்பூரை வென்றது கோவை அணி
/
டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் திருப்பூரை வென்றது கோவை அணி
டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் திருப்பூரை வென்றது கோவை அணி
டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் திருப்பூரை வென்றது கோவை அணி
ADDED : ஜூலை 23, 2025 09:41 PM
கோவை; மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி, திருப்பூர் அணியை வென்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டி.என்.சி.ஏ.,) சார்பில் மாவட்டங்களுக்கு இடையே, 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த, 19ம் தேதி முதல் கோவையின் பல்வேறு மைதானங்களில் நடந்துவருகிறது.
இதில், திருப்பூர் அணியும், மதுரை அணியும் மோதின. மழை காரணமாக, 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 32.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 124 ரன்கள் எடுத்தது. மதுரை வீரர் ஹரிஷ் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய மதுரை அணியினர், 33 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 109 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் சன்வீஸ் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அதேபோல், கோவை அணியும், திருப்பூர் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணியினர், 33 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 220 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய திருப்பூர் அணியினர், 33 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 196 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.