/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் சினிமாவின் முதல் கனவுத்தொழிற்சாலை கோவை
/
தமிழ் சினிமாவின் முதல் கனவுத்தொழிற்சாலை கோவை
ADDED : டிச 12, 2025 06:41 AM
த மிழ்த் திரைப்படத் துறை இன்று 'கோலி வுட்' என உலகம் அறிந்தாலும், அதன் உண்மையான ஆரம்ப வளர்ச்சி நடந்தது கோவையில் தான். கோவையில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவும், பின் உருவான பட்சிராஜா ஸ்டுடியோவும், அன்றைய காலத்திலேயே நவீன வசதிகளுடன் இருந்தன. ஒலிப்பதிவு, படத்தொகுப்பு அறைகள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா எல்லாம் சென்ட்ரலில் தான்.
பி.யு. சின்னப்பாவை அறிமுகப்படுத்தியது இந்த ஸ்டுடியோ. ரங்கசாமி நாயுடு, ராமகிருஷ்ணன் செட்டியார், ஸ்ரீராமலு நாயுடு ஆகியோர் இதை உருவாக்கியவர்கள்.
சென்ட்ரலில் இருந்து பிரிந்த ஸ்ரீராமலு நாயுடு உருவாக்கியது பட்சிராஜா ஸ்டுடியோ. இங்கேயே எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன் படம் எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், அஞ்சலி தேவி நடித்த மர்மயோகி, பானுமதியுடன் நடித்த மலைக்கள்ளன், பாகவதரின் சிவகவி எல்லாம் கோவையிலேயே உருவானவை.
சிவாஜி, டி.ஆர். ராஜகுமாரி, பி.யு. சின்னப்பா, எம்.ஆர். ராதா, கண்ணதாசன், எம்.எஸ்.வி., கருணாநிதி, அண்ணா, இவர்கள் அனைவரும் முதலில் நடமாடிய ஸ்டுடியோக்கள் இவை. 22 வயதில் கருணாநிதியின் அபிமன்யு, ராஜகுமாரி ஆகிய படங்களும், 1951ல் அண்ணா எழுதிய வேலைக்காரி படமும் சென்ட்ரல் ஸ்டுடியோவில்தான் எடுக்கப் பட்டது.
கவிஞர் கண்ணதாசன் 1949ல் சென்ட்ரலில் வாய்ப்பு கேட்டு வந்தவர். அவரின் முதல் சம்பளமான 100 ரூபாய் கிடைத்த 'கலங்காதிரு மனமே' பாடல், நஞ்சப்பா சாலையில் அன்று இருந்த சிறிய ஹாஸ்டல் அறையிலே எழுதப்பட்டது.
பட்சிராஜா ஸ்டுடியோ இன்று ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் குடோனாகவும், ஒரு பகுதி கல்யாண மண்டபமாகவும் உள்ளது. இங்கு தான் 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தின் மந்திரக் கதவு செட்டிங் வைத்தனர்.

