ADDED : நவ 14, 2026 09:53 PM
கந்த சஷ்டி திருவிழா
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், சுக்கிரவாரப்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், ஈச்சநாரி ஸ்ரீ திருச்செந்தில் கோட்டம் கோயில், கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில், டவுன் ஹால் கோட்டை ஈஸ்வரன் கோயில், கணபதி மாநகர் ஸ்ரீ பாலமுருகன் கோயில், ரேஸ்கோர்ஸ் வரசித்தி விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் சூரசம்ஹாரம் மாலை 3 மணிக்கு நடக்கிறது.
தேசிய கார் பந்தயம்
சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜே.கே. டயர் சார்பில் நடைபெறும் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026-ன் 2-வது சுற்று நடக்கிறது. காரி மோட்டார் ஸ்பீட்வேயில் காலை 10 மணிக்கு நடக்கும்.
பரிசளிப்பு விழா
ஐயல் செஸ் அகாடமி மற்றும் நோவா செஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற முதலாவது ‘இன்டலெக்சுவல் ஷோடவுன்’ மாநில அளவிலான செஸ் போட்டியின் பரிசளிப்பு விழா நடக்கிறது. சரவணம்பட்டில் உள்ள கே.ஜி கலை, அறிவியல் கல்லுாரில் மாலை 4 மணி நடக்கிறது.
உபநிஷத் சொற்பொழிவு
அர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் ‘உபநிஷத் சொற்பொழிவு’ நிகழ்ச்சி நடக்கிறது. அர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாதில் மாலை 5 மணிக்கு நடக்கும்.
ஆண்டு விழா
ஜெம் மருத்துவமனை குழுமத்தின் 25-ம் ஆண்டு விழா நடக்கிறது. இதையொட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நீலாம்பூர் பி.எஸ்.ஜி கன்வென்ஷன் சென்டரில் மாலை 4 மணிக்கு நடைபெறும்.
ஓட்ட பந்தயம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓட்ட பந்தயம் நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது . 17 முதல் 25, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
டைப் 1 சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகையில் ரோட்டரி மெட்ரோ, இதயங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ரோட்டரி கிளப் ஆப் கோவை சார்பில் கிட் அ தான் ஸ்மால் ஸ்ட்ரைட்ஸ்,பிக் ஸ்மையில்ஸ் நிகழ்ச்சி நடக்கிறது. ரேஸ் கோர்ஸில் காலை 7 மணி நடக்கும்.
