/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பு; சங்கப் பணியாளர்களுக்கு பாராட்டு
/
நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பு; சங்கப் பணியாளர்களுக்கு பாராட்டு
நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பு; சங்கப் பணியாளர்களுக்கு பாராட்டு
நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பு; சங்கப் பணியாளர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 21, 2025 09:46 PM
- நமது நிருபர் -
கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்கு உட்பட்ட, அனைத்து விதமான கடன் சங்கங்களின் நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பதில், சிறப்பாக பணியாற்றிய சங்கப் பணியாளர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது.
மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிரந்தர வைப்புத் தொகையை அதிகமாக சேகரித்த,கோவைநரசீபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நடராஜ், வாகராயம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மயில்சாமி, செஞ்சேரிமலையடிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கலைவாணி உட்பட, 26 சங்கப் பணியாளர்களுக்கு, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சங்கத்தை வலுப்படுத்துதல், கடன் நிலுவை தொகையை, 6 கோடியில் இருந்து,8 கோடியாக அதிகப்படுத்துதல், நிரந்தர வைப்பு தொகை நிலுவை குறைந்தபட்சம் ரூ.3 கோடி சேகரித்திடவும், நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். துணைப்பதிவாளர் ஆனந்தன் உடனிருந்தார்.