தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர் மன்றம் கல்லுாரியில் துவக்கம்

மாணவர் மன்றம் கல்லுாரியில் துவக்கம்

மாணவர் மன்றம் கல்லுாரியில் துவக்கம்


UPDATED : அக் 08, 2026 09:59 PM

ADDED : அக் 08, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:59 PM ADDED : அக் 08, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாடு துறை சார்பில், லுாக்கா அசோசியேஷன் மாணவர் மன்ற துவக்க விழா கல்லுாரி கலையரங்கில் நடந்தது. விழாவில் துறை தலைவர் பெரியசாமி வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் ஷீலாபானு தலைமை வகித்து பேசியதாவது:

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர் மன்றங்கள் துவங்கப்பட்டு, பல்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. படிக்கும் வயதில் மாணவர்கள் பொதுமக்களுக்கு அதிக அளவில் சேவை செய்ய வேண்டும். படிப்பில் மட்டுமல்லாது பிற துறைகளிலும் ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும்.

கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை உணர்ந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

விழாவில், மாணவ, மாணவியருக்கான பேச்சு, ஓவியம், பட்டிமன்றம், மாணவர்களின் உணவு சந்தைதிருவிழா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us