ADDED : ஜன 21, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம், காரமடையை சேர்ந்தவர் சபரி, 24. காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும், கோபிநாத், 34, மனோஜ்குமார், 24, ஆகியோரும் உறவினர்கள். இவர்கள் ஒரே பைக்கில் காரமடை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, கோபிநாத் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் இறங்கினர்.
சபரி இறங்கிய போது, சாலையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி வந்த சிறுமுகை தனியார் கல்லூரி பஸ், சபரியின் தலையில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.---