/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குத்துச்சண்டை போட்டியில் கல்லுாரி மாணவருக்கு தங்கம்
/
குத்துச்சண்டை போட்டியில் கல்லுாரி மாணவருக்கு தங்கம்
குத்துச்சண்டை போட்டியில் கல்லுாரி மாணவருக்கு தங்கம்
குத்துச்சண்டை போட்டியில் கல்லுாரி மாணவருக்கு தங்கம்
ADDED : செப் 10, 2025 10:04 PM
மேட்டுப்பாளையம்; மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் குத்துச்சண்டைப் போட்டியில் காரமடை டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை வணிகவியல் துறையில் பயிலும் மாணவன் கவின் பங்கேற்றார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்ட 71--75 கிலோ எடைப்பிரிவிலான இப்போட்டியில் மாணவன் கவின், வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து மண்டல அளவில் இருந்து மாநில அளவிற்கு விளையாட தேர்ச்சி செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் ரூபா, நிர்வாக மேலாளர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.----