/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்பு வீரர்களுக்கு கமாண்டோ பயிற்சி
/
தீயணைப்பு வீரர்களுக்கு கமாண்டோ பயிற்சி
UPDATED : ஜன 26, 2026 05:55 AM
ADDED : ஜன 26, 2026 05:53 AM

கோவை: தீயணைப்பு வீரர்களுக்கான கமாண்டோ பயிற்சி, மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.
கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த, 41 தீயணைப்பு வீரர்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த, 22ம் தேதி துவங்கிய பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது. பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய ஆற்றைக்கடப்பது, மொபைல்போன் டவர்களில் சிக்கியவர்களை மீட்பது, உயர்ந்த அடுக்குமாடிகளில் ஏறுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
நேற்று மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில், அடுக்குமாடிகளில் ஏறுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கான செயல்முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, நிலைய அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில், பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் மைக்கேல் பயிற்சி வழங்கினார்.

