/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் குப்பை தடுக்க கமிஷனர் உத்தரவு
/
திறந்தவெளியில் குப்பை தடுக்க கமிஷனர் உத்தரவு
ADDED : அக் 27, 2025 10:16 PM
கோவை: மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், 53வது வார்டு காமராஜர் ரோடு, காந்திபுதுார் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சென்று, துாய்மை பணியாளர்களின் வருகை பதிவை பார்வையிட்டார். வார்டு அலுவலகத்தில் குப்பையை அகற்றி, தேவையற்ற பொருட்களை வெளியேற்றி. துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
லட்சுமிபுரம் 6வது வீதி, மசக்காளிபாளையம், ஹோப்ஸ் காலேஜ் பகுதிகளில் சாலையோரங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டியிருப்பதை பார்த்த கமிஷனர், 'சிசி டிவி' கேமரா பொருத்தி கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி, கொடிசியா சாலையில் மேற்கொண்ட துாய்மை பணியை பார்வையிட்ட அவர், முகப்பு பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார் .
அப்போது, நகர் நல அலுவலர் மோகன், உதவி நகர் நல அலுவலர் பூபதி, உதவி கமிஷனர் ராம்குமார், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

