/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் பள்ளி வாகனத்தை இயக்கி டிக்கெட் வசூலித்ததாக புகார்
/
மருதமலையில் பள்ளி வாகனத்தை இயக்கி டிக்கெட் வசூலித்ததாக புகார்
மருதமலையில் பள்ளி வாகனத்தை இயக்கி டிக்கெட் வசூலித்ததாக புகார்
மருதமலையில் பள்ளி வாகனத்தை இயக்கி டிக்கெட் வசூலித்ததாக புகார்
ADDED : ஜன 04, 2024 12:07 AM

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், விதிமுறைகளை மீறி, கோவில் நிர்வாகம் பள்ளி வாகனங்களை இயக்கி கட்டணம் வசூலித்ததாக, புகார் எழுந்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மருதமலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்லும் மலை பாதையில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் படிக்கட்டு பாதை மற்றும் கோவில் பஸ் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் இயக்கும் பஸ்கள் மூலம் மட்டுமே, கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருக்கோவிலுக்கு சொந்தமான மூன்று பஸ்கள் மற்றும் மூன்று தனியார் பள்ளி வாகனங்கள் மூலம், பக்தர்களை மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
அதற்கு, ஒரு நபருக்கு, 10 ரூபாய் வீதம் கட்டணம் வசூலித்து, அறநிலையத்துறையின் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி வாகனத்தில், கட்டண டிக்கெட் வசூலிக்க கூடாது என்ற விதிமுறை மீறி, கோவில் நிர்வாகம் கட்டண டிக்கெட் வசூலித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினியிடம் கேட்டபோது, கோவிலுக்கு சொந்தமாக மூன்று பஸ்கள் மட்டுமே உள்ளன. பக்தர்கள் வெகு நேரம் காத்திருப்பதை தவிர்க்க, கோவில் உபயதாரரின் பள்ளி வாகனத்தை, கூடுதலாக இயக்கினோம். அதில், அறநிலையத்துறையின் டிக்கெட் வழங்கியே, 10 ரூபாய் பெறப்பட்டது. பக்தர்களின் வசதிக்காகவே கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன, என்றார்.