/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காதல் திருமணம் செய்தோரின் குடும்பம் ஒதுக்கப்படுவதாக புகார்
/
காதல் திருமணம் செய்தோரின் குடும்பம் ஒதுக்கப்படுவதாக புகார்
காதல் திருமணம் செய்தோரின் குடும்பம் ஒதுக்கப்படுவதாக புகார்
காதல் திருமணம் செய்தோரின் குடும்பம் ஒதுக்கப்படுவதாக புகார்
ADDED : மே 20, 2025 11:39 PM
அன்னுார்; காதல் திருமணம் செய்ததால், 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னுார் அருகே வடக்கலூரில் காதல் திருமணம் செய்த 15 பேரின் பெற்றோர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
திருவிழாவுக்கு அழைப்பதில்லை, என, கலெக்டர் மற்றும் முதல்வருக்கு கடந்த ஆண்டு புகார் மனு அனுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எட்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்திய அன்னுார் தாசில்தார் கடந்த ஜன. 12ம் தேதி பேசுகையில் 'ஒதுக்கி வைப்பது சட்டப்படி குற்றம்.
கோவில் திருவிழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். வரி வாங்க வேண்டும்,' என அறிவுறுத்தினார்.
இதையடுத்து அதே கூட்டத்தில் கோவில் வரி பெறப்பட்டது. இருதரப்பினரும் இணைந்து கோவிலில் வழிபாடு செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த கலைச்செல்வன், தாசில்தார், ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டருக்கு அனுப்பிய புகார் மனுவில், 'தற்போது வடக்கலூரில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான கூட்டத்திற்கு எங்களை அழைக்கவில்லை.
கமிட்டியில் எங்களை சேர்க்கவில்லை. இதுவரை கோவில் வரி வசூலிக்கவில்லை. திட்டமிட்டு மீண்டும் எங்களை ஒதுக்குகின்றனர்.
இதுகுறித்து கேட்ட போதும் முறையாக பதில் தெரிவிக்கவில்லை. எங்களை ஒதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையினர் கூறுகையில், 'இதுகுறித்து இரு தரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த உள்ளார்,' என்றனர்.